இயற்கை
முறையில் நம் சுவாசிக்கும் காற்றை சுத்தப்படுத்தும் எளிய தாவரங்கள்
இன்றைய
கால கட்டத்தில் நமது உணவு முறையும், சுவாச முறையும் மாறிவிட்டது, காற்றின் மாசு
பாடு காரணமாக சுவாசிக்கும் காற்றானது மாசுபட்ட நிலையில் சுவாசிக்கிறோம். அதனால் பல
நோய்களுக்கு ஆளாகிறோம். இதைனை தடுக்கும் விதமாக இயற்கை முறையில் காற்றினை
சுத்தப்படுத்தும் சிறு தாவரங்களை பற்றி இப்போ பார்க்கலாம்.
கற்றாழை செடி வீட்டிற்குள்ளும், வெளியிலும் வளர கூடிய செடி. கிரமங்களில் வீட்டிற்கு
வெளியில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். நெடுங்காலமாக ஆயர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் போற்றக்கூடிய ஒரு மூலிகை
செடி என்றே கூறலாம். அது மட்டுமின்றி காற்று
சுத்திகரிப்பிலும் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்த்து வருகிறது என்பது பலருக்கும் அறியாத ஒன்று. காற்றில் எப்போதும் புத்துணர்ச்சி
இருப்பதை உறுதிசெய்கிறது இது. சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு கை கொடுக்கும்
மருந்தாக விளங்கி வருகிறது.
ஐவி (Ivy)
இது படரும் தன்மை கொண்ட கொடி. இதை பல வீடுகளில் அழகுக்காக முகப்பில் படர விட்டிருப்பதைப்
பார்த்திருப்போம். இவ்வகை செடி அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமானதும்
கூட என்றால் நம்ப முடிகிறதா. அதிலும் குறிப்பாக ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சனை
உள்ளவர்கள்,
வீட்டில் இதனை வளர்ப் பது நல்லது. இது காற்றில் உள்ள
ஃபார்மால்டிகைடு மற்றும் அசுத்தத்தை நீக்கக்கூடியது. வறட்சியிலும் எளிதாக வளரக்
கூடிய தன்மை கொண்டது.
மூங்கில் செடி (Bamboo Plant)
மூங்கில் மரங்கள் மற்றும் செடிகளை நாம் பல
நேரங்களில்,
காடுகளில் தான் பார்த்திருப்போம். ஆனால் தற்போது அந்த மூங்கில் செடி நம் வீட்டை
அலங்கரிக்கவும் பயன்படுகிறது. காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை
நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படுவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.எனவே
இவ்வகை செடிகளை நீங்கள் தாராளமாக வீட்டிலேயே வளர்க்கலாம்.
மருள் (Snake Plant)
மருள் தண்ணீரின்றி பல நாட்கள் வாழக்கூடியது. குறைந்த வெளிச்சதிலும் நன்கு செழித்து
வளர கூடியது. எல்லாவற்றிற்கும் மேலாக நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக்
கிரகித்து ஆக்சிஜனை நாள் முழுவதும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. இது படுக்கையறையில் வைபதற்கு ஏற்ற
தாவரமாகும். நாசாவால் அடையாளம் காணப்பட்ட சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரங்களில்
இதுவும் ஒன்று.
எலுமிச்சைப்புல் (Lemon grass)
அருகம்புல், கோதுமைப்புல்
போல எலுமிச்சைப் புல்லும் நமக்கு நன்மை பயக்கும் செடி என்கிறார்கள். நல்ல வாசனையை தரக் கூடியது, இதனால் லெமன் கிராஸ் பாக்டீரியாக்கள், காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் இவற்றை அழித்து
சுத்தமான காற்றை தருகிறது.
மணிபிளான்ட் (Money plant)
நம்மில் பலருக்கும் மணி பிளான்ட் என்றால் செல்வதை
கொடுக்கும் தாவர இனம் என்று மட்டுமே
தெரியும். ஆனால் காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம்
பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன்
மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை
கொண்டது. இந்த செடியை டெவில் ஐவி என்றும் சொல்வார்கள். இந்த செடியானது வீட்டில்
உள்ள ஃபார்மால்டிஹைடு,
பென்சைன் மற்றும் சைலின் போன்ற தூசிகளை முற்றிலும்
வெளியேற்றி,
வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
இம்முறையை பயன்படுத்தி
சுவாச காற்றினை சுத்தமானதாக சுவாசித்து வலமாக வாழ்க.